2025ஆம் ஆண்டிற்கான தேசிய உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்னெடுத்து வரும் விளையாட்டு நிகழ்வின் இறுதி அம்சமாக
கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான அணி ரீதியான விளையாட்டு நிகழ்வும், வலிகாமம் தெற்குப் பிரதேச சபை நடத்திய 2025ஆம் ஆண்டிற்குரிய தேசிய உள்ளூராட்சி வார விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் இன்று {17.10.2025 – வெள்ளிக்கிழமை} யாழ் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் காலை 9:45 தொடக்கம் பிற்பகல் 4:45 வரை நடைபெற்றது.
நேற்று முன்தினம் சபையின் ஏழாலை உப அலுவலக எல்லைக்குட்பட்ட விலங்கன் இந்து மயானம் கௌரவ தவிசாளரின் நெறிபடுத்தலில் கௌரவ உறுப்பினர்களின் மேற்பார்வையில் பொதுமக்களின் பங்களிப்புடன் சபையின் உத்தியோகத்தர்களும் இணைந்து துப்பரவு செய்யப்பட்ட போதான பதிவுகள்…..

‘இலங்கையில் சிறந்த தரமான சுற்றுலா சேவையை வழங்க ஒன்றிணைவோம் ‘
ஜனாதிபதி செயலக அனுசரணையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா பணியகம், வடக்கு மாகாணம் இணைந்து நடத்தும் முச்சக்கரவண்டி மற்றும் மகிழூர்ந்து சாரதிகளுக்கான நெறிமுறைகள், மனோபாவம் போன்றவற்றை விருத்தி செய்வதற்கான வடக்கு மாகாண பயிற்சித்திட்டம்.
இப் பயிற்சி திட்டமானது வலி தெற்கு பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் சனிக்கிழமை (1.11.2025) நடைபெற்றது
சுன்னாகம் பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா இன்றைய தினம் 07.11.2025 பொது நூலக மண்டபத்தில் மதியம் 2.30 மணிக்கு திருமதி கௌரி விக்னேஸ்வரன் (பொறுப்பதிகாரி சுன்னாகம் உப அலுவலகம்) தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ தவிசாளர் திரு தியாகராஜா பிரகாஷ்
சிறப்பு விருந்தினராக செயலாளர் திரு அழகேசன் பிரதீபன்
கௌரவ விருந்தினராக திருமதி லதாவதி பத்மநாதன் அதிபர் யா/ சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை என்போர்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சபையின் விளாத்தியடி ஒழுங்கை புனரமைப்பின் போதான பதிவுகள்
