உடுவில் உப அலுவலக எல்லைக்குட்பட்ட 10 ஆம் வட்டாரத்திற்குரிய சமூக கண்காணிப்பு குழு கலந்துரையாடல்
சனிக்கிழமை 06.12.2025 பி.ப 2.30 மணியளவில் ஆரம்பமாகி பி.ப 5.00 மணியளவில் நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில்பிரதேச சபை செயாளர் அ.பிரதீபன், கௌரவ உறுப்பினர் திரு.திருமுருகராஜன் , தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு. செங்கையாழியன் , வருமான பரிசோதகர் திரு. சந்திரகுமார் , வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ரேணுகா, திருமதி. கீதா மற்றும் இவ் வட்டார வீதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுன்னாகம் உப அலுவலக எல்லைக்குட்பட்ட 11 ஆம் வட்டாரத்திற்குரிய சமூக கண்காணிப்பு குழு கலந்துரையாடல்
சனிக்கிழமை 06.12.2025 மு.ப 9.45 மணியளவில் ஆரம்பமாகி பி.ப 3.45 மணியளவில் நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில்கௌரவ உறுப்பினர் திரு.த.துவாரகன் , சுன்னாகம் உப அலுவலக பொறுப்பதிகாரி திருமதி.வி. கௌரி, தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு. K. யசோகாந்தன், வருமான பரிசோதகர் செல்வி. ம.அருண்ஜா, வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. கெ. கர்சினி மற்றும் இல் வட்டார வீதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுன்னாகம் உப அலுவலக எல்லைக்குட்பட்ட 12 ஆம் வட்டாரத்திற்குரிய சமூக கண்காணிப்பு குழு கலந்துரையாடல் .
வெள்ளிக்கிழமை 05.12.2025 காலை 10.30 தொடங்கப் பெற்று 3.30 மணியளவில் நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில் பிரதேச சபை செயலாளர் அ.பிரதீபன்,கௌரவ உறுப்பினர் சு.ரமேந்திரா,கௌரவ உறுப்பினர் பா.ஆதவன்,வருமான பரிசோதகர் ம.அருண்ஜா, வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் ர.தன்சிகா மற்றும் அவ் வீதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சுன்னாகம் உப அலுவலக எல்லைக்குட்பட்ட வட்டாரம் 07 இல் புனரமைக்கப்படவுள்ள வீதிகளுக்கான சமூக கண்காணிப்பு குழு கூட்டமானது வியாழக்கிழமை 04.12.2025 காலை 11.00 – மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச சபை செயலாளர் திரு. அ.பிரதீபன்,உப அலுவலக பொறுப்பதிகாரி திருமதி. வி.கௌரி,கௌரவ உறுப்பினர் செ.கஜேந்திரா,வருமான பரிசோதகர் செல்வி. ம.அருண்ஜா,வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி பா.நீரஜா மற்றும் அவ் வீதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சுன்னாகம் உப அலுவலக எல்லைக்குட்பட்ட ,11_ வட்டாரம், மகளீர் கல்லூரி மேற்கு வீதி குறுக்கு வீதி திருத்த சமூக கண்காணிப்பு குழு கலந்துரையாடல்
புதன் கிழமை 03.12.2025 மாலை 3.45மணியளவில் நடைபெற்றது
2025ஆம் ஆண்டிற்கான தேசிய உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்னெடுத்து வரும் விளையாட்டு நிகழ்வின் இறுதி அம்சமாக
கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான அணி ரீதியான விளையாட்டு நிகழ்வும், வலிகாமம் தெற்குப் பிரதேச சபை நடத்திய 2025ஆம் ஆண்டிற்குரிய தேசிய உள்ளூராட்சி வார விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் இன்று {17.10.2025 – வெள்ளிக்கிழமை} யாழ் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் காலை 9:45 தொடக்கம் பிற்பகல் 4:45 வரை நடைபெற்றது.
நேற்று முன்தினம் சபையின் ஏழாலை உப அலுவலக எல்லைக்குட்பட்ட விலங்கன் இந்து மயானம் கௌரவ தவிசாளரின் நெறிபடுத்தலில் கௌரவ உறுப்பினர்களின் மேற்பார்வையில் பொதுமக்களின் பங்களிப்புடன் சபையின் உத்தியோகத்தர்களும் இணைந்து துப்பரவு செய்யப்பட்ட போதான பதிவுகள்…..

‘இலங்கையில் சிறந்த தரமான சுற்றுலா சேவையை வழங்க ஒன்றிணைவோம் ‘
ஜனாதிபதி செயலக அனுசரணையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா பணியகம், வடக்கு மாகாணம் இணைந்து நடத்தும் முச்சக்கரவண்டி மற்றும் மகிழூர்ந்து சாரதிகளுக்கான நெறிமுறைகள், மனோபாவம் போன்றவற்றை விருத்தி செய்வதற்கான வடக்கு மாகாண பயிற்சித்திட்டம்.
இப் பயிற்சி திட்டமானது வலி தெற்கு பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் சனிக்கிழமை (1.11.2025) நடைபெற்றது